அய்யர்மலையில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்
ADDED :2492 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில் உள்ள சுரும்பார் குழலி உடனுறை ரத்னகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இது செங்குத்தாக, 1,017 படிகள் கொண்டது. இங்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. கோவில் குடிபாட்டுக்காரர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, பக்தர்கள் பங்களிப்பு தொகை வழங்கியதின் பேரில், ஆறு கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோப்கார் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணி தரைப்பகுதியில் நிறைவு பெற்று, மலைபகுதியில் தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.