செம்பாக்கம் பொன்னம்பலம் சுவாமிகள் கோவிலில், தங்க கவசத்தில் நந்தீஸ்வரர்
ADDED :2492 days ago
திருப்போரூர்:செம்பாக்கம் பொன்னம்பலம் சுவாமிகள் கோவிலில், தை பிரதோஷ வழிபாட்டில் நேற்று (ஜன., 18ல்), தங்க கவசத்தில் நந்தீஸ்வரர் அருள்பாலித்தார்.திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக, பொன்னம்பலம் சுவாமிகள் கோவில் உள்ளது.மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி வழிபாடு விமரிசையாக நடக்கிறது. அந்த வகையில் நேற்று இரவு, 7:00 மணிக்கு, தை மாத பிரதோஷம் விமரிசையாக நடந்தது.நந்திதேவர் தங்க கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.