ராமேஸ்வரம் கோயிலில் தைப்பூச தெப்ப தேரோட்டம்
ராமேஸ்வரம்: தைப்பூசததையொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள உபகோயில் தீர்த்த குளத்தில் தைப்பூச தெப்ப தேரோட்டம் நடந்தது.
தைப்பூச விழா யொட்டி நேற்று (ஜன.,20ல்) அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை திறந்து, ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் காலை 10:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்தி களுடன் புறப்படாகினர். பின் திருக்கோயில் உபகோயிலான லெட்சுமணேஸ்வரர்
கோயிலில் சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் மகா தீபாராதனை நடந்தது.
பின் கோயில் தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி, மகா தீபாராதனை நடந்தது. பின் தேரின் வடத்தை பிடித்து பக்தர்கள் இழுத்து தெப்பத்தை வலம் வந்தனர். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மங்கயைர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் அண்ணாத்துறை, கமலநாதன் உட்பட
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி வீதி உலா சென்று, திருக்கோயிலில் எழுந்தருளியதும் அர்த்தசாம பூஜை நடத்தப்பட்டு, கோயில் நடை சாத்தப்பட்டது.