உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டியில் வெங்கடேஷ்வரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டியில் வெங்கடேஷ்வரப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி : காரியாபட்டி சத்திரம்புளியங்குளத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடேஷ்வரப் பெருமாள் கோயில் சிதிலமடைந்து இருந்தது. இக்கோயிலை புனரமைக்க கிராமத்தினர் முற்பட்ட போது, பல்வேறு தடைகள் ஏற்பட்டு, பணிகள் நடைபெறாமல் போனது.

இந்நிலையில், ஆலயம் கட்டி வழிபட வேண்டும் என காரியாபட்டியில் வசிக்கும் பெண்ணின் கனவில் காட்சி அளித்தார் வெங்கடேஷ்வரப் பெருமாள் என கிராமத்தினரிடம் பெண்ணின் கணவர் தெரிவித்தார். பெண்ணின் கணவரே முன்னின்று ஊர் மக்களுடன் , நன்கொடை வசூல் செய்து, ஆலயம் கட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேஷ்வரப் பெருமாள், பரிவார மூர்த்திகள் கருடன், விஷ்வக்ஷேனர், அனுமன், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் சீரமைக்கப்பட்டனர்.

விமானங்களுக்கு சுதர்சன, மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, முதல்கால பூஜை, தீபாரா தனை, புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கோபூஜை, கஜபூஜை, அஸ்வபூஜை, அலங்கார பூஜை, யாத்ராதான சங்கல்பம், கடங்கள் புறப்பாடு , சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !