மடத்துக்குளம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2556 days ago
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே நடந்த காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மடத்துக்குளம் அருகே கழுகரையிலுள்ள, காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, நேற்றுமுன்தினம் (ஜன., 19ல்) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின் வருண, தனபூஜை, மஞ்ச காவ்யம், கணபதி ஹோமமும், மாலையில், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜைகள் நடந்தன.நேற்று (ஜன., 20ல்)காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், காலை, 7:30 மணிக்கு காமாட்சியம்மன் மற்றும் கோவில் வளாகத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரசாமி, சுப்பிரமணியசாமி, கருப்பணசாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.