உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூரில் உள்ள, பிரித்யங்கிரா தேவி கோவில் தேரோட்டம்

ஓசூரில் உள்ள, பிரித்யங்கிரா தேவி கோவில் தேரோட்டம்

ஓசூர்: ஓசூரில் உள்ள, அதர்வன பிரித்யங்கிரா தேவி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட்-2 மோரனப்பள்ளி பகுதியில், அதர்வன பிரித்யங்கிரா தேவி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு, கால பைரவர் மண்டல அபிஷேகம் மற்றும் பிரித் யங்கிரா தேவி தேரோட்டம் நேற்று (ஜன., 20ல்) நடந்தது. காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், கால பைரவர் யாகம், 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, காலபைரவர் கோவில் மண்டப கும்பாபிஷேகம் நடந்தது. மதியம், 3:00 மணிக்கு தாரை, தப்பட்டை முழங்க, உடுக்கை பம்பை இசையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரித்யங்கிரா தேவி தேரோட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், முன்னாள் நகராட்சி தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சப்தகிரி அம்மா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !