உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் பகுதிகளில் தைப்பூசம் தொடக்கம்

ராசிபுரம் பகுதிகளில் தைப்பூசம் தொடக்கம்

ராசிபுரம்: ராசிபுரம், சுற்றுவட்டார பகுதிகளில், தைப்பூச விழா தொடங்கியது. தமிழகத்தில், தை மாதம் முருக கடவுளுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. அதுவும் தை பவுர்ணமி யன்று, தைப்பூச விழாவில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை நடக்கும்.

நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, வெள்ளக்கல்பட்டி, ஒடுவன்குறிச்சி பகுதி மக்கள், தைப்பூசத் தன்று, பழனியில் இருப்பதுபோல், பாதயாத்திரையாக சென்று முருகனை வழிபடுகின்றனர். நேற்று (ஜன., 20ல்), கோனேரிப்பட்டி பகுதியில், 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பூஜை பொருட்களை எடுத்துச் சென்றனர். பாச்சல் அடுத்த கடந்தப்பட்டியில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில், இரவு முழுவதும் காவடி எடுத்து நடனமாடி ஊர் சுற்றி வந்தனர். பிறகு காளிப்பட்டிக்கு நடந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !