ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் கோவில் தேரோட்டம்
ADDED :2561 days ago
நாமக்கல்: ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டர் கோவில் தைப்பூச தேர்த் திருவிழா, இன்று (ஜன.,21ல்) நடக்கிறது. சேந்தமங்கலம் தாலுகா, ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஜன., 19ல்) இரவு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (ஜன., 21ல்) காலை, 11:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளுதல், மாலை, 4:00 மணிக்கு வடம் பிடித்தல். நாளை சத்தாபரணம், வரும், 24ல் வசந்த உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதாகர், தக்கார் அம்சா, ஊர் மக்கள் செய்துள்ளனர்.