தலைவாசல் முருகன் கோவிலில், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
ADDED :2469 days ago
தலைவாசல்: பால்குடம், காவடி தூக்கி, ஏராளமான பக்தர்கள், முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தலைவாசல், கோவிந்தம்பாளையம், முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்று (ஜன., 20ல்) தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள், பால்குடம், காவடி தூக்கி, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக வந்து, கோவிலில் நிறைவு செய்தனர். தொடர்ந்து, மூலவர் முருகனுக்கு பாலபிஷேகம் நடந்தது. இன்று (ஜன., 21ல்), தேரோட்டம் நடக்கவுள்ளது.