மதுரை அயிலாங்குடி வராகர் வருடாபிஷேக விழா
ADDED :2467 days ago
மதுரை: மதுரை அயிலாங்குடி ஏ.பி.டவுன் ஷிப் லட்சுமி வராகர் கோயிலில் 7ம் ஆண்டு வருடாபி ஷேக விழா நடந்தது. ஜன.,18 வராகப் பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாக வாசனம், கும்ப ஸ்தாபனம், வேத திவ்யபிரபந்த பாராயணம், திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி, அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீலட்சுமி கடாட்சம் என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் ஜெ.ஜெயராம் பேசினார். ஏராளான பக்தர்கள் பங்கேற்றனர்.