உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா

பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 20ல்) இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தைப்பூசத் திருநாளான நேற்று (ஜன., 21ல்) அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

காலை, 10:00 மணிக்கு விநாயகப் பெருமான்,பாலதண்டாயுதபாணி சுவாமி வள்ளி தெய்வானை சமேதகராக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருளினர். சிறப்பு பூஜைக்கு பின், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வடம்பிடித்து துவக்கி வைத்தார்.நிலையில் இருந்து புறப்பட்ட தேர்கள், மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி வழியாக தேர்நிலையை அடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !