ராசிபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம்
ADDED :2488 days ago
ராசிபுரம்: தொ.ஜேடர்பாளையத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் நடந்தது. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ.ஜேடர்பாளையத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இங்கு கிருத்திகை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை; தைப்பூச தினத்தில் விநாயகர், முருகனுக்கு தேரோட்டம் நடப்பது வழக்கம்.
இந்தாண்டு, தைப்பூச விழா நேற்று முன்தினம் (ஜன., 20ல்) தொடங்கியது. நேற்று (ஜன., 21ல்) காலை, சுப்ரமணியர் மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் விநாயகரும், பின்னர் சுப்ரமணிய சுவாமியும் தேரில் உலா வந்தனர். விநாயகர் தேரை பெண்கள், குழந்தைகள் மட்டுமே இழுத்து வந்தனர். லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.