உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாதபாளையத்தில் செல்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சொக்கநாதபாளையத்தில் செல்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சென்னிமலை: சென்னிமலை அடுத்த, சொக்கநாதபாளையத்தில் உள்ள, செல்வசக்தி விநாயகர் கோவில், புனரமைப்பு பணி நடந்து, புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டது.

இதை யடுத்து, கும்பாபிஷேக விழா, 19ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி, லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலிலிருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், கோபுர கலசம் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஜன., 21ல்) காலை, இரண்டாம்கால யாக பூஜையுடன், நிகழ்ச்சிகள் தொடங்கி, பூர்ணாகுதி முடிந்து, புனிதநீர் கலசம், கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

புனிதநீரால், கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து செல்வசக்தி விநாயகர், ஆதி விநாயகர் மற்றும் பரிவார

தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சொக்கநாதபாளையம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை சேர்ந்த, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !