நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா
ADDED :2485 days ago
சிவகங்கை: சிவகங்கை, நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில், நகரத்தார்களின் செவ்வாய் பொங்கல் விழா நடந்தது.
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில், நகரத்தார்கள் வசிக்கின்றனர். ஆண்டு தோறும், தை பொங்கலுக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய் அன்று, செவ்வாய் பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கோயிலில் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.