உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி திருவிழா

தர்மசாஸ்தா கோயிலில் புஷ்பாஞ்சலி திருவிழா

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் தர்மசாஸ்தா கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் புஷ்பாஞ்சலி திருவிழா நடந்தது. ஐயப்பசுவாமியின் உருவம் வண்ணகோலமிட்டு தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சுவாமிக்கு லட்சார்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏாளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !