கோவை ராம்நகர் ராமர் கோவிலில் சப்தயாக மஹோத்சவம்
ADDED :2479 days ago
கோவை:ராம்நகர், ராமர் கோவிலில், ஸ்ரீ மத் பாகவத சப்த யாக மஹோத்சவம் நடந்து வருகிறது. ஏழு நாட்கள் நடக்கும் உபன்யாச நிகழ்ச்சியில், ஏழு தலைப்புகளில் உபன்யாசங்கள் வழங்கப்பட உள்ளன. மஹோத்சவத்தின் துவக்க நாளன்று, துருவ சரித்ரம் என்ற தலைப்பில், சுபத்ராஜி சொற்பொழிவாற்றினார். மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் ஆற்றிய செயல்கள் குறித்தும் விளக்கினார். இதில் திரளான ஆன்மிக அன்பர்கள் பங்கேற்றனர்.