உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் அருகே பெரியநாயகி அன்னை ஆலயத்தில் பெருவிழா

விழுப்புரம் அருகே பெரியநாயகி அன்னை ஆலயத்தில் பெருவிழா

விழுப்புரம்:விழுப்புரம் அருகே நங்காத்தூரில் அமைந்துள்ள துாய பெரியநாயகி அன்னை ஆலயத்தில் 160ம் ஆண்டு பெருவிழா நாளை (24ம் தேதி) துவங்குகிறது.

நங்காத்தூர் தூய பெரியநாயகி அன்னை ஆலய 160ம் ஆண்டு பெருவிழாவை யொட்டி, நாளை (24ம் தேதி) காலை 6.00 மணிக்கு திருப்பலி, 7.00 மணிக்கு புனித பிரான்சிஸ் சேவியர் ஆலய பங்குதந்தை ஆல்பர்ட் பெலிக்ஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை 6.00 மணிக்கு தேர்பவனி, நற்கருணை ஆசீர்வாதம் நிகழ்ச்சிகளும், வரும் பிப்., 2ம் தேதி காலை 8.00 மணிக்கு கூட்டு திருப்பலியும், இரவு
8.00 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !