உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியானம் செய்தால் உடல் நலம் நிச்சயம் பயிற்சி முகாமில் அறிவுரை

தியானம் செய்தால் உடல் நலம் நிச்சயம் பயிற்சி முகாமில் அறிவுரை

பந்தலூர்: வளரும் பருவத்தில் தியானம் செய்ய பழகினால், எதிர்காலத்தில் ஏற்படும் பல்வேறு குறைகளை களையலாம், என, தெரிவிக்கப்பட்டது.பந்தலூர் அருகே, தேவாலா அரசு
பழங்குடியினர் பள்ளி வளாகத்தில், கூடலூர் கல்லூரி மாணவர்களுக்கு தியான பயிற்சி அளிக்கப்பட்டது. தேவாலா மனவளக்கலை மன்ற பேராசிரியர் ராமச்சந்திரன் பங்கேற்று,
பல்வேறு தியான பயிற்சிகளை செய்து காட்டி பேசுகையில், தற்போதைய கால கட்டத்தில் அனைத்து உணவு பொருட்களிலும் நச்சு கலந்துள்ளது. குறுகிய கால விவசாயம், அதிக லாபம் என்ற நோக்கில் பல்வேறு நச்சு மருந்துகளை தெளிப்பதால் உணவு பயிர்கள் மட்டுமின்றி நிலமும் பாழ்பட்டுள்ளது.

இதனால், உணவுகளில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் மனித உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. அதில், சில நோய்களை சரிப்படுத்த முடியாமலும், சிகிச்சைக்கு கூடுதலான செலவும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இளம்வயதில் தியானம், மூச்சுபயிற்சி செய்ய கற்று கொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம், உடலில் ஏற்படும் பல வித நோய்களை கட்டுப்படுத்த இயலும், என்றார்.இதில், பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன், கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மகேஷ்வரன், மனவளக்கலை மன்ற செயலாளர் ஜெயக்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !