உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டையில் பெரியநாயகி அன்னை ஆலய தேர் திருவிழா

மங்கலம்பேட்டையில் பெரியநாயகி அன்னை ஆலய தேர் திருவிழா

மங்கலம்பேட்டை: கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய தேர் திருவிழா நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய தேர் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி, மதியம் 12:00 மணி, இரவு 7:00 மணிக்கு திருப்பலி நடந்தது.நேற்று முன்தினம் 23ம் தேதி தேர் திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு திருப்பலி, இரவு 8:00 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இரவு 9:15 மணிக்கு பாளையக்காரர் பாலதண்டாயுதம் திருத்தேர் வடம் பிடித்து, விழாவைத் துவக்கி வைத்தார். விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !