புதுச்சேரி சின்மயா கோவிலில் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம்
ADDED :2447 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சின்மயா சூரியன் கோவிலில், உலக நன்மை வேண்டி, வரும் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம் நடக்கிறது.புதுச்சேரி, கிருஷ்ணா நகர் மெயின்ரோடு 17வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இக்கோவிலில், உடல் நலன், உள்ளத்தூய்மை, உலக நன்மைக்காக, வரும் 27ம் தேதி சமஷ்டி மஹா ஹோமம் நடக்கிறது.இதில் பொதுமக்கள் பங்கேற்று, தாங்களே ஹோமம் நடத்தலாம். காலை 7:00 மணி முதல் இரவு 8:00 வரை நடக்கும் ஹோமத்தில், உகந்த நேரத்தை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு, 9443229859, 8870391390 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.