உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரசூரில் மரகதாம்பிகை உடனுறை மகாகாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கரசூரில் மரகதாம்பிகை உடனுறை மகாகாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

வில்லியனூர்: கரசூர் மரகதாம்பிகை உடனுறை மகாகாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை மகாகாளீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி வாஸ்து சாந்தி, கோ பூஜை, கணபதி வேள்வி, முதல் கால வேள்வி நடந்தது. 22ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி, மாலை யில் மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தது.நேற்று முன்தினம் (23ம் தேதி) காலை 5:00 மணியளவில் நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், அர்ச்சனை, காலை 6:45 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 7:00 மணியளவில் விமான கும்பாபிஷேகம், தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணியளவில் மகா அபிஷேகம், இரவு 7:00 மணியளவில் மரகதாம்பிகை உடனுறை மகாகாளீஸ்வரர் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவில்எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பினர்கள், விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !