அவலூர்பேட்டையில் வள்ளலார் ஜோதி விழா கருத்தரங்கம்
ADDED :2503 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் வள்ளலார் ஜோதி விழா கருத்தரங்கம் நடந்தது. அவலூர்பேட்டை வள்ளலார் ஞானசபையில் தைப்பூச தினம் மற்றும் வள்ளலார் ஜோதியான தின விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
சபை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.தமிழ்சங்க தலைவர் புருஷோத்தமன், சிதம்பரநாதன், சிவநேசன், ஆகியோர் வள்ளலார் பெருமை குறித்து பேசினர். இதில் ஏழுமலை, செல்வராஜ், சிவகுமார், நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருதரங்கில் பங்கேற்ற பொது மக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.