திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா
ADDED :2487 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நடந்தது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் இவ்விழா நடக்கும். விழாவையொட்டி சுவாமி, அம்மனை கோயிலில் இருந்து அழைத்து வரப்பட்டனர். சிவாச்சார்யார் ராஜப்பா பட்டர் சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் செய்தார். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது.