உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்

லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்

 பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனுாரில் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு பிரமோற்வசம் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கருடவாகனம், சேஷவாகனம், பல்லாக்கு மோகினி அலங்காரம், வேணுகோபால அலங்காரம், திருத்தேர், தொட்டி திருமஞ்சனம், மட்டை அடி உற்சவம், தீர்த்தவாரி ஆகியன நடக்கின்றன.விழாவையொட்டி ஹம்ச வாகனம், அனுமந்த வாகனம், யாளி வாகனம், யானை வாகனம, குதிரை வாகனம், புஷ்பக விமானங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !