உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் நீராடும் பழநி புனிதநதி குப்பையால் பாழாகும் அவலம்

பக்தர்கள் நீராடும் பழநி புனிதநதி குப்பையால் பாழாகும் அவலம்

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீராடும் புனித சண்முகாநதி பராமரிப்பு இல்லாமல் ஆக்கிரமிப்பு, குப்பையால் பாழாகியுள்ளது. பழநி முருகன் கோயிலில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சண்முகாநதியில் குளிக்கின்றனர். அதன்பின் உடலில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் மலைக்கோயிலுக்கு வருவதை பாரம்பரியமாக கடைப்பிடிக்கின்றனர். தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் செடி,கொடிகள் வளர்ந்து சண்முகாநதி புதர்மண்டி கிடக்கிறது.

குளிக்கும் பக்தர்கள் விட்டு செல்லும் பழைய துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை அகற்றப்படாமல் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. மேலும் குளிக்கும் பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. சுகாதார கேட்டால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சண்முகா நதியில் குவிந்த குப்பையை அகற்ற வேண்டும். குளிக்கும் பகுதி யில் துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !