செங்கல்பட்டில் விவேகானந்தர் ரதத்திற்கு வரவேற்பு
ADDED :2484 days ago
செங்கல்பட்டு: மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், விவேகானந்தர் ரதத்திற்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில், 10வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும், 30ல் துவங்கி, பிப்.., 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, சென்னையில் துவங்கப்பட்டுள்ள,விவேகானந்தர் ரதம், பல இடங்களுக்கு செல்கிறது.இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளிக்கு, விவேகானந்தர் ரதம், 25ம் தேதி வந்தடைந்தது.பள்ளி முதல்வர், டாக்டர் சங்கரநாராயணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், மலர் தூவி, விவேகானந்தர் ரதத்தை வரவேற்றனர். முதல்வர் சங்கரநாராயணன், விவேகானந்தர் பற்றியும், நம் கலாசாரம், பண்பாட்டை பற்றியும், மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.