விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2776 days ago
விருத்தாசலம்:சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத
சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது.வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.