உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழநியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்

பழநி : தைப்பூசவிழா முடிந்தாலும், பழநி முருகன் கோயிலுக்கு மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள், காவடிகள்,
பால்குடங்கள் எடுத்து வருகின்றனர். நேற்று (ஜன., 27ல்) விடுமுறை, சுபமுகூர்த்ததினம் என்பதால், ஏராளமான திருமணம், கடைகள் திறப்புவிழா நடந்தது.

இதன் காரணமாக மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் நான்கு மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !