மதுரை ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
ADDED :2480 days ago
மதுரை: மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்திவிழா நடந்தது.
இதையொட்டி மங்களஆரத்தி, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சிறப்பு பூஜைகள் நடந்தன. படத்திற்கு சாரதா வித்யாலயா பள்ளி மாணவியர் மாலையணிவித்தனர்.
மடத்தின் தலைவர் சுவாமி கமாலத்மானந்தர் பேசியதாவது: கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை என எடுத்து காட்டியவர் விவேகானந்தர். எழுந்து கொள்ளுங்கள், விழித்து கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும் வரை நில்லாமல் செல்லுங்கள் என கூறியிருக்கிறார்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒரு சிறிதும் தாமதிக்காமல் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்பது அவரது சிந்தனையாக இருந்தது. அவரது சிந்தனைகள் தனி ஒரு
மனிதரின் சிந்தனைகள் அல்ல. உயர்ந்த இந்திய பாரம்பரிய சிந்தனைகளாகும் என்றார்.