உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை கோலாகலம்

உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், திருநீலகண்ட நாயனார் குருபூஜை கோலாகலம்

வீரபாண்டி: திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடந்தது. சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சிவனடியார்களுக்கு தொண்டு செய்த, 63 நாயன்மார்களின், ஜென்ம நட்சத்திரத்தில், குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.

குலாலர் சமூகத்தைச் சேர்ந்த, திருநீலகண்ட நாயனாரின் ஜென்ம நட்சத்திரமான நேற்று (ஜன., 29ல்), சேலம், குலாலர் சமூகம் சார்பில், 19ம் ஆண்டாக குருபூஜை நடந்தது. நீலாயதாட்சாயினி சமேத திருநீலகண்டரின் உற்சவ திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம் செய்து, பரிவட்டம் கட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அங்கு கூடியிருந்த பக்தர்களிடம், மூத்த சிவாச்சாரியார் பாலசுப்ர மணியர், 12 ஆண்டுகள் பிரிந்திருந்த திருநீலகண்டநாயனார், நீலாயதாட்சாயினியின் வாழ்க்கையில், சிவன் திருவிளையாடல் புரிந்து, ஒன்றுசேர்த்து வைத்த வரலாற்றை தெரிவித்தார்.

தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில், சர்வ அலங்காரத்தில் நீலாயதாட் சாயினி சமேத திருநீலகண்டரை எழுந்தருளச்செய்து, பக்தர்கள் புடைசூழ, கோவிலை பக்தர்கள் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !