உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் விழா

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் மண்டல அபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜை நடந்தது.

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் 12ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று (ஜன.,29ல்) மாலை நடந்த சிறப்பு பூஜையில் கணபதி ஹோமம், மகாலட்சுமி பிரசன்ன ஹோமம், 108 சங்காபிஷேக ஹோமங்கள் நடந்து புனித நீரால் முத்துமாரிம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து , சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடந்தது.

அபிஷேகம் மற்றும் பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள், பிரசன்னா ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.விக்கிரவாண்டி , விழுப் புரம் , புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலூர் பகுதியிலிருந்து குல தெய்வ வழிபாட்டுக் காரர்கள் திர ளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !