காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் ரூ.21 லட்சம் வசூல்
ADDED :2446 days ago
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில், காணிக்கையாக, 20.92 லட்சம் ரூபாய் கிடைத்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, பல மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அவர்கள் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜன., 31ல்) காலை, சோளிங்கர் கோவில் உதவி ஆணையர், சுப்ரமணியன் முன்னிலையில், கோவில் செயல் அலுவலர், முருகேசன் மேற்பார்வையில், கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 20.92 லட்சம் ரூபாயும், 41 கிராம் தங்கம் மற்றும் 230 கிராம் வெள்ளியும் கிடைத்தன.