உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் பெண்மை போற்றும் விழா

சென்னையில் ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் பெண்மை போற்றும் விழா

சென்னை: ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சியின், மூன்றாம் நாளான நேற்று (பிப்., 1ல்),, பெண்மையை போற்றும் விழா நடந்தது. இதில், ஏராளமான, மாணவ - மாணவியர், தங்கள் அன்னைக்கு, பாத பூஜை நடத்தி, வழிபட்டனர்.சென்னை, வேளச்சேரியில் உள்ள, குருநானக் கல்லூரியில், 10வது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி, ஜன., 30ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இக்கண்காட்சியின் மூன்றாம் நாளான நேற்று (பிப்., 1ல்), பெண்மையை போற்றும், கன்யா வந்தனம், சுவாசினி வந்தனம் ஆகிய தலைப்புகளில், விழா நடந்தது.

இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரைப் படிக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.மாணவியருக்கு புத்தாடை, அணிகலன்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, மாணவர்கள் பாத பூஜை செய்தனர்.

சுவாசினி வந்தனம் எனும் தாய்மையைப்போற்றும் நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கும், பாத பூஜை செய்யப்பட்டது.ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை காண, சைவ சமய ஆதீனங்கள், 20 பேர், நேற்று (பிப்., 1ல்) வருகை தந்தனர். அவர்களுக்கு, சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

ஆதீனங்களுக்கு, பக்தர்கள் பாதபூஜை செய்தனர். நேற்று (பிப்., 1ல்) மாலை, கொங்கு வேளாளர் கலாசார மையம் சார்பில், ஒயிலாட்டமும், மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !