சின்னவாடியில் மஞ்சளாடை பக்தர்களின் பால்குட ஊர்வலம்
மங்கலம்பேட்டை:சின்னவடவாடியில் மஞ்சளாடை பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில்,சமயபுரத்து மாரியம்மன் மஞ்சளாடை பக்தர்களின்பால்குட ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு மஞ்சளாடை பக்தர்கள் பால்குடம் ஏந்தி, முக்கிய வீதிகளின் வழியாகஊர்வலமாகச் சென்றனர். பகல் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு சப்த கன்னிகைகள் அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலின் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.காலை கணபதி நவகிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 11:00 மணிக்கு 10 க்கும் மேற்பட்ட பெண்கள், வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம், கலச அபிஷேகமும் நடந்தது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற அரசு வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.