உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையில் பழமையான செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு சப்த கன்னிகைகள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலின் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.

காலை கணபதி நவகிரக ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை 11:00 மணிக்கு 10 க்கும் மேற்பட்ட பெண்கள், வேணுகோபால சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அங்கு செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம், கலச அபிஷேகமும் நடந்தது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற அரசு வேம்பு மரத்துக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !