விவேகானந்தரை பின்பற்ற வேண்டும்
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 13ம் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி., அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை கேந்திரா பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர்பேசுகையில், உலகின் முதல் குருவான பெற்றோரை மதித்து நடந்தால், எல்லா வகை செல்வங்களும் நம்மை வந்து அடையும். சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள், எக்காலத்துக்கும் ஏற்றவை.
குறிப்பாக, அவருடைய கட்டுரைகளை படித்து, அதன்படி நடப்பதால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம், என்றார்.நிகழ்ச்சியில், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தாளாளர் வெங்கடேஸ்வரன், கல்வி இயக்குனர்கள் சண்முகம், குணசேகரன், திருநாவுக்கரசு, முதல்வர் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.