கோவையில் கோடி லலிதா சகஸ்ரநாம பாராயணம் ஜப யக்ஞம்
ADDED :2553 days ago
கோவை:கோவை ஜன கல்யாண் அமைப்பு, பரசுராம வித்யார்த்தி சேவா சங்கம் மற்றும் தாம்ப்ராஸ் கவுண்டம்பாளையம் கிளை சார்பில், ஸ்ரீ கோடி லலிதா சகஸ்ரநாம பாராயண ஜப யக்ஞம், ராம் நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில், நாளை 3ல் காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமமும், காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை யக்ஞம் நடக்கிறது. இத்துடன், சுமங்கலி பூஜை, வேதபாரதி அறவழி அந்தணர் அமைப்பு சார்பில், நடக்கவுள்ள அந்தணர் சிறுவர், பெரியவர்களுக்கான சந்தியாவந்தன பயிற்சி முகாமுக்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது.