காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், பழைய சிலை மண்டல ஸ்தபதி ஆய்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், தொன்மையான உற்சவர் சிலையை, மண்டல ஸ்தபதி, மார்க்கபந்து, நேற்று (பிப்., 1ல்) ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரத்தில், பிரபலமான மற்றும் மிக பழமையானது, ஏகாம்பரேஸ்வரர் கோவில். வழக்கு இக்கோவிலில், இரு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட, புதிய உற்சவர் சிலையில் முறைகேடு நடந்ததாக, தலைமை ஸ்தபதி, செயல் அலுவலர் உள்ளிட்ட, ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையை, சில மாதங்களுக்கு முன், கோவிலில் இருந்து எடுத்துச் சென்று, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தொன்மையான உற்சவர் சிலை பயன்பாட்டில் உள்ள நிலையில், பங்குனி உத்திர பெருவிழாவிற்கு, இச்சிலையை தயார்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும், சேதமாகி இருக்கும் தொன்மையான உற்சவர் சிலைக்கு, ஜடிபந்தனம் செய்ய வேண்டும் எனவும், வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில், வேலூர் இணை ஆணையர் உத்தரவின்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், மண்டல ஸ்தபதி, மார்க்கபந்து, நேற்று (பிப்., 1ல்) ஆய்வு நடத்தினார்.
எதிர்பார்ப்புஉற்சவர் சிலையை தொடர்ந்து, ஏலவார்குழலி அம்மன் சிலையையும் ஆய்வு செய்தார்.தொன்மையான உற்சவர் சிலையை ஆய்வு செய்த ஸ்தபதி, இணை ஆணையருக்கு அறிக்கை அளிக்கவுள்ளார்.அவரது அறிக்கையை தொடர்ந்து, தொன்மையான உற்சவர் சிலையை சரிசெய்து, பங்குனி உத்திர பெருவிழாவிற்கு தயார்படுத்தப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துஉள்ளது.