திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருடசேவை விமரிசை
ADDED :2733 days ago
திருவள்ளூர்: வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நேற்று நடந்தது.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்று நடந்தது. அதிகாலை, ராகவா, கோவிந்தா என்று பக்தர்களின் சரண கோஷத்துடன், கருடசேவை, கோபுர தரிசனம் நடைபெற்றது.பின், வீதி புறப்பாடு துவங்கியது. உற்சவர் வீரராகவர், ஈக்காடு கல்யாண வீரராகவர் கோவில் வரை சென்று, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம், திருவள்ளூர் கோவிலுக்கு திரும்பினார். இரவு, ஹனுமந்த வாகனத்தில் வீதி வலம் வந்தார்.இன்று, காலை சேஷ வாகனத்திலும், இரவு, சந்திர பிரபையிலும் புறப்பாடு நடைபெறும். 6ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.