குமாரபாளையம் செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், தை அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :2439 days ago
கருமத்தம்பட்டி:சோமனூர் அருகில் உள்ள பிரசித்திபெற்ற குமாரபாளையம் செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், அம்மனுக்கு அலங்கார பூஜை மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
சோமனூர், குமாரபாளையம் செளடேஸ்வரி அம்மன் திருக்கோவில் கமிட்டியினர் கூறுகையில், செளடேஸ்வரி அம்மனுக்கு நேற்று முன்தினம் (பிப்., 3ல்) இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதேபோல, நேற்று (பிப்., 4ல்) தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜைகள் நடந்தன என்றனர்.