உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோபுர சிலையில் விரிசல்: பரவிய வதந்தி

திருவண்ணாமலை கோபுர சிலையில் விரிசல்: பரவிய வதந்தி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கோபுர சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக, பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கி.பி., 16-17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அம்மன் கோபுரத்தில், 2.5 அடி அகலம், 32 அடி உயரம் கொண்ட, கல்தூணில் உத்தரகோசமங்கை சிலை உள்ளது. கடந்த, 2002ல், அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது, சிலையில் லேசான விரிசல் (ஏர் கிராக்) உள்ளது, கண்டறியப்பட்டது. இதனால், பெரியளவில் பாதிப்பில்லை என்பதால், அப்படியே விடப்பட்டது. இந்நிலையில், அந்த சிலையில் விரிசல் ஏற்பட்டதாக, பக்தர்களிடையே வதந்தி பரவியது. இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே கண்டறியப்பட்ட விரிசலால், சிறிதளவு கூட பாதிப்பில்லை. பொதுமக்கள் யாரும் விரிசல் ஏற்பட்டதாக கூறவில்லை. இதை, ஒரு சில பத்திரிகை நிருபர்களே, கோவில் நிர்வாகத்துக்கு எதிராக திட்டமிட்டு, வதந்தி பரப்பியுள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !