உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பை சங்கீத உற்ஸவம் பிப்.14ல் துவக்கம்

செம்பை சங்கீத உற்ஸவம் பிப்.14ல் துவக்கம்

பாலக்காடு:கேரளா பாலக்காடு மாவட்டம் செம்பையில் 105ம் ஆண்டு ஏகாதசி சங்கீத உற்ஸவம் பிப்., 14ல் துவங்கி பிப்.,16 வரை நடக்கிறது.பிப்., 12ல் கொடியேற்றம் நடக்கிறது. பிப்.,14 மாலை 4:30 மணிக்கு கர்நாடக இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் கச்சேரி நடக்கிறது. பிப்.,16 மாலை 5:30 மணிக்கு புவனா ராமசுப்பு இசை கச்சேரி நடக்கிறது. தொடர்ந்து கர்நாடக இசைக்கலைஞர்கள் விஜய் ஜேசுதாஸ், ஜேசுதாஸ், ஜெயன் பாடுகின்றனர். தலைமை நிர்வாகி செம்பை ஸ்ரீனிவாசன், சுரேஷ் உட்பட செம்பை குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !