உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்கு தலைமுறையாக தொடரும் யாகசாலை பணி

நான்கு தலைமுறையாக தொடரும் யாகசாலை பணி

மானாமதுரை: 12 வருடங்களுக்கு ஒரு முறை கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முக்கிய இடம் பிடிப்பது யாகசாலை தான்.

யாகசாலை அமைப்பதற்கு ஆகம விதிப்படி சிவாச்சாரியார்களின் வழிகாட்டுதலுடன், மூலவருக்கு வடகிழக்கு மூலையில் (ஈசாணி) இடம் தேர்வு செய்யப்பட்டு சுடாத பச்சை செங்கற்களை கொண்டு பச்சை மண்ணால் பிசைந்து கும்பாபிஷேகம் முடிந்த மழையில் கரையுமாறு கட்டப்படுகிறது.

மேலும் யாகசாலையை வர்ணங்கள் மற்றும் கலர் பேப்பர்களால் அழகு படுத்தப்பட்டு அதில் யாக குண்டங்கள் வளர்த்து இறைவனுக்கு பூஜை செய்கின்றனர்.

இதில் முப்பது முக்கோடி தேவர்களும் கலந்து கொண்டு இறைவனம் பலம் பெற வேண்டி கொள்வதாக ஐதீகம் கூறுகின்றது. தற்போது மானாமதுரை ஆனந்த வல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலைகளை நான்கு தலைமுறைகளாக இந்த பணியை
தேவகோட்டையை சேர்ந்த பஞ்சநாதன் 65, குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது: எனக்கு முன் தாத்தா காளிமுத்து, தந்தை குருசாமி ஆகியோர் செய்து வந்தனர். தற்போது நான் இந்த பணிகளை செய்கிறேன்.எங்கள் குடும்பத்தினர் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட கேரளா, பெங்களூரு, மும்பை போன்ற இடங்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் யாகசாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம்.

இந்த பணி இறைவனுக்கு செய்கின்ற பணி என்பதால் மனதிற்கும், உடலுக்கும் சந்தோஷமாக உள்ளது என்றார். தொடர்புக்கு: 92451 42182


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !