உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்துவார்பட்டி ஊராட்சி வடுகபட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சித்துவார்பட்டி ஊராட்சி வடுகபட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை:சித்துவார்பட்டி ஊராட்சி வடுகபட்டியில் கன்னிமூலகணபதி, காளியம்மன், பகவதியம்மன், பாலமுருகன், எல்லைகருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக நேற்றுமுன்தினம் (பிப்., 7ல்) மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கி நடந்தன. நேற்று (பிப்., 8ல்) விக்னேஸ்வர, கோமாதா, கன்னிகா பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சேர்வையகாரன்பட்டி மேலப்பெருமாள் கோயில் அர்ச்சகர் திருவேங்கடம, பிலாத்து வரதராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் பூபதிசர்மா கும்பாபிஷே கத்தை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !