உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் 13ல், ராகு,கேது பெயர்ச்சிவிழா

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் 13ல், ராகு,கேது பெயர்ச்சிவிழா

திருவாரூர்: திருப்பாம்புரம், சேஷபுரீஸ்வரர் கோவிலில், வரும், 13ல், ராகு,கேது பெயர்ச்சிவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருப்பாம்புரத்தில் அமைந்துள்ளது வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீஸ்வரர் கோவில். இங்கு, ராகு கேது ஒரே சரீரமாக, தனி சன்னிதியில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

வரும்,13 மதியம், 2:02 மணிக்கு, கடக ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு ராகுவும், மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதை ஒட்டி, இக்கோவிலில், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அனுக்ய விக்னேஸ்வர பூஜையுடன், முதல் கால பூஜையும், 13 அன்று காலை, 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் துவங்குகின்றன. அன்று மதியம், 2:02 மணிக்கு, ராகு, கேது பெயர்ச்சி ஆன உடன், மகாதீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !