உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிளிப்பட்டி, சாலைப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலம்

மகிளிப்பட்டி, சாலைப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலம்

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி, சாலைப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, சாலைப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இன்று பிப்., 9ல் மாலை முதல் கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை பிப்., 10ல் காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !