உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட கூட்டம்

கரூர் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பிச்சைமுத்து தலைமையில், தான்தோன்றிமலையில் நடந்தது.

பூஜாரிகளுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில், ஊரணி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், பக்தர்களுக்கு இலவச கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். நாகம்பள்ளி, மலைக்கோவிலூரில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மாவட்ட பூஜாரிகள் மாநாட்டை வரும் ஏப்ரல், 7ல், கரூரில் நடத்துவது உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சதீஷ், கண்ணன், மாரிமுத்து உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !