உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தை வெள்ளிக்கிழமையில் கோபி கோவில்களில் சிறப்பு பூஜை

தை வெள்ளிக்கிழமையில் கோபி கோவில்களில் சிறப்பு பூஜை

கோபிசெட்டிபாளையம்: தை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோபி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், தை கடைசி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று (பிப்., 8ல்) அதிகாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதேபோல், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், ஏராளமான பக்தர்கள், தீபமேற்றி வழிபட்டனர். கோபி, பச்சமலை முருகன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இந்த, சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !