உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டை மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

நாமகிரிப்பேட்டை மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை மகளிர் ஆன்மிக இயக்கம் சார்பில், பால்குட அபிஷேகம் நடந்தது. நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோவிலில், மகளிர் ஆன்மிக இயக்கம் சார்பில், தை கடை வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். இதில், 108 பால்குட ஊர்வலம் வருவர். அதன்படி, நேற்று(பிப்., 9ல்) , 12வது ஆண்டாக, பால்குட ஊர்வலம் நடந்தது.

காலை, 10:00 மணிக்கு பெருமாள் கோவிலில் தொடங்கிய ஊர்வலம், மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !