உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணன்தாங்கல் மூல ஸ்வர்ண காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்ணன்தாங்கல் மூல ஸ்வர்ண காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: கண்ணன்தாங்கல் மூல ஸ்வர்ண காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள, 108 சக்தி பீடங்கள் கும்பாபிஷேகம், பிப்., 10ல் நடைபெறுகிறது.

சுங்குவார்சத்திரம் அருகே, மங்களபுரிஷேத்ரம் என அழைக்கப்படும், கண்ணன்தாங்கல் அமைந்துள்ளது. இங்கு, மூல ஸ்வர்ண காமாட்சியம்மன் கற்கோவில் உள்ளது.இக்கோவிலை சுற்றி, 108 சக்தி பீடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கும், நான்கு ராஜகோபுர விமானங்கள், மூல ஸ்வர்ண காமாட்சியம்மன் கோவிலுக்கும், நாளை பிப்., 10ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளளது.கும்பாபிஷேக தினமான பிப்., 10ல், காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடும், 8.15 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !